மகனாய், கனவுகளுடன் காதலன் !


அது அழகான ஆடி மாதம் ,
பொழுதோ காலை, வழியெங்கும் மலைகளும்
கண் குளிர வைக்கும் மரங்களுமாய் இருக்க ;
தொடங்கியது மழை .
நானும் எனது மோட்டார் சைக்கிளும் ஒதுங்க,
கண்டேன்  ஒர் குற்றருவி , ஒருவர் நின்று நனையுமாறு
குளிர் நீருடன்.
அவ்வருவியருகே குல்முகர் மரத்தடியில் நான் ஒதுங்க நினைக்க,
நின்றது மழை !
செல்ல மனமின்றி, மரத்தடியில், மண் மணத்தில்,
உதிர்ந்த மலர்கள் மேல் நான் அமர்ந்தேன்.
மகளிர் கல்லூரி பேருந்து நிர்பிடம் போல், 
என் கண்முன்னே இயற்கை காட்சிகள், கண் மூட மணமில்லை.
இருந்தும் உறங்கலாகினேன் எவ்வாறோ நான் அறியேன் !
வந்ததோர் கணவு; அது கணவல்ல கவிதை !
என் கல்லூரி உணவகப் பொங்கல் உண்டு,
முதல் பாட வேலையில் கூட கண்டதில்லை அப்படியோர் கணவு !

கதிரவன், மதி கண்டு மதி மயங்கி கடல் மேல் தவழும் நேரமது.
நீண்ட நெடுங்கடர் கரையில், நானும் என்னவளும்,
திரைப்படத்தில் வரும் நாயகன் நாயகி போல் ஆசையாக அல்லாது; 
போட்டி போட்டு ஓடிக்கொண்டிருக்கிறோம்
என் அண்ணையின் மடியில் துயில் கொள்ள  இடம் பிடிக்க.
விடுமுறை நாட்களில் காலை நேரம் கடந்து உறங்கினால்,
என் தந்தை தூங்கட்டும் மகன் என்ற எண்ணத்தில் 
என் பெயர் சொல்லி, நேரம் சொல்லி நகர்வார்.
ரசித்த படி  உறக்கம் தொடர்வேன்.
சிலமணி நேரம் கடந்த பின்னர் நான் காலை உணவு உண்ண நேரம் கழிந்துவிடுமோ என்று அன்னை, கோபம் கொண்டவளாய் காட்டிக்கொள்ள,  கோபக்கூவலாக என் பெயர் கூவி விடியல் நேரம் உரைப்பாள் !
அன்னையின் பொய் கோபம் உணர்ந்தும், அவள் மணம் கோணாதிருக்க துள்ளி எழுவது போல் எழுந்தேன் ;
மாலை கணா கலைக்க, என்னை அருவிச் சாரல் சீண்டியதும்.

மணதிலொ கோபம், தூக்கம் கலைத்த அருவி மீது !
முகத்திலோ புண்ணகை, பொம்மை படம் பார்க்கும் சிறுவன் போல,
இது இரவல்ல காலை, கணவு கை கூட வாய்ப்பிருப்பதாய் நம்பும் மடச்சிறுவனாய் !

                           - காதல் செய்து மங்கையை மணந்து கொள்ள அண்ணையின் அனுமதிக்காக, தொடரும் கணவுகளுடன் காத்திருக்கும் காதலன்.

Comments

Popular posts from this blog

அடி மறதியே...

பெண் தோழி

மகிழ்ச்சி