Posts

எனை உடையாள் உதித்த தின வாழ்த்து

Image
விடியலும், விடியலை அடையலும் வில்லாத வில்லியுடனே; உதிரமும், உயிரும் உனதே என; உணர்ந்தே உனை மணந்தேன்! பிறப்பும் இறப்பும் அவனால். இனி என் நடையும், நடைபாதையும் உன்னால்! உன் பாதையில் பூவும் மனமும் பசுமையும் பாசமும் உன்னதமும் உயர்வும் உனதாக வாழ்த்தும் உனதான, உன் அடியேன் 

அடி மறதியே...

மா ணவனாய் வெறுத்தேன்,   கற்றவை  கரைந்ததால்! நண்பனாய் அணைத்தேன்,  துரோகம்  மறந்ததால்! மகனாய் முறைத்தேன், கரு வாழ்வு   நினைவைக் கலைத்ததால்! குடிமகனாகத் திகைத்தேன்,  அரசியல் நடப்பதால்! காதலனாய் கரண்டியுடன் காத்திருக்கிறேன்,   அவள் மறதி மட்டும் மறந்ததால்!!!

வாழ்க்கைப் பாடம்

Image
உலகெங்கும் தேடினேன்,  தேடித் தேடித் திகைத்தேன்! வாழ்க்கை வழங்கும் பாடம்;  பயிர்ப்பிக்க பிற பள்ளிகள் இல்லை.

இறைவனிடம் வினா

இறைவா, பிழை புரியவே படைத்தாயோ புவியை?

அனுபவம் தந்தவை

பணத்துக்கும் புகழுக்கும் தரப்படுபவை; நல் மனதுக்கும், மனிதனுக்கும் மறுக்கப்படுகின்றன.

எனக்கொரு தோழி வேண்டும்

எனை அறிந்து நல்வழி நடத்த! என் கனவறிந்து - மனம் போல் வாழ், நான் உள்ளேன் என கூற!

பெண் தோழி

பெண் தோழி அன்று, படித்ததில் பிடித்ததை பகிர்ந்தால். இன்று, குடித்ததில் பிடித்ததை பருகச்சொல்கிறாள்!