மகனாய், கனவுகளுடன் காதலன் !
அது அழகான ஆடி மாதம் , பொழுதோ காலை , வழியெங்கும் மலைகளும் கண் குளிர வைக்கும் மரங்களுமாய் இருக்க ; தொடங்கியது மழை . நானும் எனது மோட்டார் சைக்கிளும் ஒதுங்க , கண்டேன் ஒர் குற்றருவி , ஒருவர் நின்று நனையுமாறு குளிர் நீருடன் . அவ்வருவி யருகே குல்முகர் மரத்தடியில் நான் ஒதுங்க நினைக்க , நின்றது மழை ! செல்ல மனமின்றி , மரத்தடியில் , மண் மணத்தில் , உதிர்ந்த மலர்கள் மேல் நான் அமர்ந்தேன் . மகளிர் கல்லூரி பேருந்து நிர்பிடம் போல், என் கண்முன்னே இயற்கை காட்சிகள் , கண் மூட மணமில்லை . இருந்தும் உறங்கலாகினேன் எவ்வாறோ நான் அறியேன் ! வந்ததோர் கணவு ; அது கணவல்ல கவிதை ! என் கல்லூரி உணவகப் பொங்கல் உண்டு , முதல் பாட வேலையில் கூட கண்டதில்லை அப்படியோர் கணவு ! கதிரவன் , மதி கண்டு மதி மயங்கி கடல் மேல் தவழும் நேரமது . நீண்ட நெடுங்கடர் கரையில், நானும் என்னவளும், திரைப்படத்தில் வரும் நாயகன் நாயகி போல் ஆசையாக அல்லாது; போட்டி போட்டு ஓடிக்கொண்டிருக்கிறோம் ;...