Posts

Showing posts from 2011

மாதா பிதா நண்பன் குரு தெய்வம் !

மனிதன் மென்மேலும் மாறியும், உலகம் மாறாமல் உருளக்காரணம் ? இவள் அன்பு, எங்கும், இன்றும் இருப்பதால் ! குடியிருக்கும் கல் வீடு, இடி இடித்தால், இடியும்; நான் குடியிருந்த இவ்வீடோ, எனதிடி தாங்கி, மகிழும்.  அன்னை  ! அன்னை என்ற கோவிலில் குடியுள்ள தெய்வம்.. எனக்கு உயிர் தந்த இவர் சொல் மிக்க மந்திரம் இல்லை. என் புகழ் உலகம் பாட, தான் கேட்டு மகிழும், என் முதல் ரசிகன், தந்தை ! வாழ்க்கை என்னும் மேடையில், தடுமாறி ஏறிய என்னை, தன் கை தந்து , தலை நிமிர்ந்து நடக்கச் செய்தவன் . என்னையும், உலகையும், நான் அறியா காலத்தில், என்னை அறிந்து, பின், உலகம் என்னை அறியச் செய்தவன், நண்பன் ! தந்தைக்கு, என்னைச் செல்வமாய் தந்தவள், அன்னை ; கல்வியை எனக்கு செல்வமாய் தந்து , இருள் தங்கியிருந்த என் அறிவில், ஒளி ஏற்றி வைத்தவர், ஆசான் ! என்னை உலகுக்கு அனுப்பி, அன்னை, தந்தை, நண்பன், ஆசான், நல்லுடல், என்ற பரிசுகளும் தந்து , நல்வாழ்வை, நான் வாழ வைப்பவன், இறைவன்!!!